5வது இளைஞர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை வேலைத்திட்டம் 2021 ஒக்டோபர் மாதம் 21 தொடக்கம் 23 வரை “துல்ஹிரிய மாஸ் அத்தன” தனியார் நிறுவன வளாகத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடாத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் திரு. தமித விக்ரமசிங்க அவர்களது தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின்போது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி டாக்டர் அஜித் ரோஹன அவர்களினால் எதிர்கால தலைவர்களிடம் காணப்பட வேண்டிய தலைமைத்துவ பண்புகள் பற்றிய விரிவுரை ஒன்றும் நடாத்தப்பட்டது.

இதன்போது இந்நிகழ்வு தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு பேருவளை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும்,பிரதியமைச்சருமான அஹ்மத் சாதிக் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. அந்த வகையில் அவர் கருத்து தெரிவிக்கையில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன அவர்களால் நடாத்தப்பட்ட இந்த தலைமைத்துவம் தொடர்பான நிகழ்வானது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியிலும் இந்நாட்டின் எதிர்கால தலைவர்கள் என்ற ரீதியிலும் எமக்கு மிகுந்த பிரயோசனம் அளிக்கக்கூடியதாக இருந்தது என்று குறிப்பிட்டார். மேலும் இத்தருணத்தில் மிக முக்கியமான ஒரு கருத்தினை பிரதி பொலிஸ்மா அதிபர் முன்னிலையில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.


அதாவது இந்நாட்டை கட்டியெழுப்பும் நோக்குடன் சமூகம் சம்பந்தமான சிந்தனையில் இந்நாட்டின் இளைஞர்கள் தன்னுடைய வகிபாகத்தை உணர்ந்து சமூகத்துக்கு நன்மை தரக்கூடிய விடயங்களை மேற்கொள்ளும்போது அரச துறையில் மேலும் விசேடமாக இலங்கை பாதுகாப்பு துறையிலிருந்து கிடைக்கப் பெறவேண்டிய ஊக்கங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.


பிரதானமாக குறிப்பிட்டு கூறுவதாயின் ஒவ்வொரு பிரதேச வாரியாக இருக்கக்கூடிய பாதுகாப்பு அலுவலகங்களில் Police station

பிரஜா பொலீஸ் மக்கள் பாதுகாப்பு அதிகாரிகள் என்று ஒரு பிரிவு இருக்கிறது அதேபோல் சமூகம் சார்ந்த செயற்பாடுகளை செய்வதற்கும் போலீஸ் அலுவலகங்களில் ஒரு பிரிவு இருந்தே வருகின்றது. இருந்தபோதிலும் அந்த துறையுடன் இணைந்து செயற்படுவதற்கு இளைஞர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நாட்டில் குற்றம் செய்த இளைஞனுக்கு தண்டனை வழங்குவதில் இருக்கக்கூடிய முக்கியத்துவமானது குற்றம் செய்யாத ஒரு இளைஞர் சமூகத்தினை உருவாக்குவதில் ஆர்வம் குறைவாகவே காணப்படுகின்றது என்பதை இலங்கை நாட்டின் சாதாரண பிரஜை யாகவும் ,பட்டப் படிப்பை மேற்கொண்ட இளைஞன், இளைஞர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதியமைச்சர் மற்றும் சர்வதேசத்தில் இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அங்கத்தவர் என்ற ரீதியில் உணர்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.


மேலும் சமூகம் சம்பந்தமான செயற்பாடுகளை தத்தமது பிரதேச பாதுகாப்பு அதிகாரிகளுடன் சேர்ந்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டால் இளைஞர்களுக்கும் துணையாக அமையும் மேலும்

குறைந்தது ,ஒவ்வொரு பிரதேசத்திலும் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இளைஞர்களும் சேர்ந்து சமூகம் சார்ந்த வேலைகளை செய்ய தூண்டப்பட வேண்டும் என்பதே அவரது கருத்து என்றும் ஆதலால்

இந்த குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிவாய் வேண்டிக்கொண்டார்.





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.