ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானினால் தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து சில தகவல்கள் தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2019 நவம்பர் 19 இன் பின்னர் சட்டமா அதிபர் மூலம் எத்தனை குற்றச்சாட்டுக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன?
- அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களின் பெயர்கள் என்ன?
- அவற்றின் வழக்கு எண்கள் என்ன?
- எந்த திகதிகளில் குறித்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் / அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் சட்டமா அதிபரால் விடுவிக்கப்பட்டுள்ளன?
ஆகியவற்றுக்கான தகவல்களை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வினவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)