தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பல பாகங்களிலும் சாதகமான மாற்றங்களை பலர் எதிர்பார்த்தனர்.ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து அந்த நம்பிக்கை பொய்த்துபோய் விட்டது.அவை வெறும் எதிர்பார்ப்புகளாகவே மாறிவிட்டன. நாடு இன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது.வெளிநாட்டு கையிருப்பு தற்போது அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது.இப்போது மக்கள் மத்தியில் ஒரு விசித்திரமான விரக்தி ஏற்பட்டுள்ளது.  ஒரு எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.அதையும் மீறி ஒரு வெறுப்பு வளர்ந்து வருகிறது. மக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள்.ஒருபுறம், நெருக்கடிகள் மக்களின் மன அழுத்தத்தை வெகுவாக அதிகரித்துள்ளன. மறுபுறம் முடிவில்லாத பொருளாதாரச் சிக்கல்களால் மக்களின் வாழ்க்கை சீர்குலைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலில் எரிவாயு விலை உயர்வு பற்றியே பேசினோம். அதன் பிறகு எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு வரிசைகள் பற்றி பேசினோம்.பின்னர் நாங்கள் எரிவாயு குண்டுகள் பற்றி பேசினோம். பின்னர் நாங்கள் எரிவாயு இறப்புகளைப் பற்றி பேசினோம்.

மண்ணெண்ணெய் வரிசைகள் பற்றிய பேச்சுகளும் தற்போது தொடங்கியுள்ளன. உச்ச விலையில் விற்பனை செய்யப்படும் மண்ணெண்ணெய் அடுப்புகளுக்குப் பிறகு விறகு அடுப்பில் இறங்கினோம். இப்போது அதிக விலைக்கு விற்கப்படும் விறகு மூட்டைகளைப் பற்றியே பேசுகிறோம். அந்த வகையில் அடுப்பு பிரச்சினையை தீர்த்து வைத்த மக்கள்,விறகு அடுப்பு தயார் செய்து குழந்தைகளுக்கு என்ன கொடுப்பது என்பதை பொறுத்திருந்து பார்க்கிறார்கள். பால் மா இல்லை. பால் மாவுக்கு நீண்ட வரிசைகள் உள்ளன.அரிசியை விட எரிவாயு பற்றி பேசுவது நல்லது.அரிசி பிரச்சினையை தீர்க்க இராணுவம் கூட அனுப்பப்பட்டது ஆனால் அரிசி ஆலை உரிமையாளர்களாலயே பிரச்சினை தீர்க்கப்பட்டது. இன்று சந்தை விலையை அரிசி ஆலை உரிமையாளர்களே முடிவு செய்கின்றனர். நுகர்வோர் விவகார அதிகாரசபை, வர்த்தகம் மற்றும் விவசாய அமைச்சு என்பன பெயரளவிலானவைகளாகவே செயற்படுகின்றன.

இந்த நாட்டில் மக்கள் முன்னெப்போதும் இல்லாத இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.ஓரளவேனும் எப்படியாவது பண்டிகை காலத்தை எப்படி கொண்டாடுவது? பண்டிகை காலத்தையொட்டி, கருப்புக் கடைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்க துவங்கியுள்ளனர்.சுரண்டல் மிக நேர்த்தியாக நடக்கிறது.பொருளாதார நெருக்கடி உண்மையானது.ஆனால் சுரண்டல் என்பது வேறு விடயம்.இன்று உணவு உண்ண வேண்டிய வேளையில் புதைகுழி தோண்டப்படும் காலம் வந்து விட்டது. 

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள போதிலும், இலங்கையில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் தாக்கம் ஒவ்வொரு துறையையும் பாதிக்க ஆரம்பித்துள்ளது.எரிவாயு மட்டுமின்றி, பெட்ரோல் விலையும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசல் விலையும் அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் ஹோட்டல்கள், பேக்கரிகள் மூடத் தொடங்கியுள்ளன. டீசல், பெட்ரோல் விலை உயர்வால் பேருந்து, பாடசாலை வேன், முச்சக்கர வண்டி போன்றவற்றின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

உரத் தட்டுப்பாடு நெற்பயிர்ச் செய்கையை மட்டுமன்றி, மரக்கறிச் செய்கை, உருளைக்கிழங்குச் செய்கை, தேயிலை பயிர்ச்செய்கை உட்பட எமது அனைத்து விவசாயம் மற்றும் தோட்டத் துறைகளையும் பாதிக்கின்றது. ஒருபுறம், நமது ஏற்றுமதி வருவாய் எதிர்மறையான பக்கத்தில் உள்ளது. விவசாயம் மற்றும் தோட்டத் துறைகளில் உள்ள மக்கள் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உணவுப் பற்றாக்குறை அபாயம்,உணவுப் பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளது. இதுவரை இல்லாத வகையில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு மற்றும் இதர கிழங்குகளின் விலையும் உயர்ந்துள்ளது. நாங்கள் உண்ணக்கூடிய அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் வாங்கும் வாய்ப்பு இன்றைக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு,இன்று இல்லை நாளை என்று தெரிகிறது.மக்களின் இந்த அப்பாவி எதிர்பார்ப்புகள் காலதாமதமாகி,விலகிச் செல்லும் வரை நனவாகும் அறிகுறிகள் தென்படவில்லை.இதற்குக் காரணம் இந்நாட்டின் மோசமான பொருளாதார நிர்வாகமே. 

தேர்தலுக்கு மக்களைக் கவரும் வகையில் ஏமாற்றும் கொள்கை அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் பொதுமக்களின் பங்களிப்புக்கு இடமில்லாது போகிறது. விவசாயத் துறையில் எடுக்கப்பட்ட முடிவுகள் இதற்கு சிறந்த உதாரணம்.பத்து வருடங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என உறுதியளித்து, 24 மணித்தியாலங்களுக்குள் மாற்றங்களைச் செய்ய தீர்மானித்தது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. விவசாயத் துறை வல்லுநர்கள் மற்றும் துறைசார் அறிஞர்களைக் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவுகள் நாட்டுக்கும் மக்களுக்கும் பல நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன. முடிவெடுப்பதில் அந்தந்த துறைகளில் ஈடுபடும் நிபுணர்களிடமிருந்தும் விலக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. நேரடியாக அறிவுரை கூறும் அரச ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.அமைச்சர்களையும், நாடாளுமன்றத்தையும் கைப்பாவையாக மாற்றும் நடவடிக்கை மும்முரமாக நடந்து வருகிறது. எல்லாவற்றையும் தீர்மானிக்கும் கண்ணுக்குத் தெரியாத கும்பலின் பலம் பற்றி நாடு முழுவதும் பேசப்படுகிறது.மக்கள் பிரதிநிதிகளும், அரச ஊழியர்களும் சீரழிந்து கிடப்பது நன்றாகவே புரிகிறது. தேர்தல்களில் மட்டும் மக்களின் காலடிக்குச் செல்லும் நமது தலைவர்கள், தங்களுக்கு ஆணை கிடைத்தவுடன் ஜனநாயக ரீதியில் முடிவெடுப்பதில் மக்களின் பங்களிப்பை நாடத் தயங்குகிறார்கள். மக்கள் நலனுக்குப் பதிலாக, குறுகிய நோக்கங்களுடன் தனிநபர் முடிவுகள் எடுக்கப்படுவதைப் பார்த்து, பொதுமக்களின் பங்களிப்புக்கான கதவுகளை மூடுவதைக் காண்கிறோம். குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இந்த நெருக்கடிகளிலிருந்து வெளிவரும் கவர்ச்சிகரமான தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் கோஷங்களுக்கு ஏமாறாமல், அந்த அரசியல் இயக்கங்களின் அமைப்புக் கட்டமைப்புகளின் ஜனநாயகத் தன்மையைப் பார்ப்பது நமது மக்களுக்கு முக்கியமானது. இல்லையெனில், கவர்ச்சிகரமான சொற்களஞ்சியத்தால் ஏமாற்றப்பட்ட ஜெர்மனியின் மக்கள், ஹிட்லரின் ஆட்சியின் கீழ் சித்திரவதை மற்றும் அடிமைத்தனத்தின் சகாப்தத்தின் அபாயத்தை நாமும் சந்திக்க நேரிடலாம்.தேர்தலில் மட்டும் சுறுசுறுப்பாக செயல்படாமல், நாட்டில் முடிவெடுக்கும் செயல்முறை குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருப்பதும், பொறுப்புடன் செயல்படுவதும் குடிமக்கள் சமூகத்தின் பொறுப்பாகும்.

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அன்றாடம் வாழ முடியாத நிலை காணப்படுவதுடன், நாடு மேலும் இக்கட்டான காலத்தை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அடிப்படையோ, விமர்சனமோ இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவுகளால் அரசாங்கம் கடும் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளது. ஒரு முடிவு தவறாக இருந்தால், அதைத் திருத்த வேண்டும். அதே தவறான முடிவை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அதே முடிவுகளை எடுத்தால், அதை எதிர்கொள்ளும் சூழ்நிலை இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும்.இந்த பின்னணியில், அரசாங்கம் கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது.

மறுபுறம், நாடும் மக்களும் பல பலத்த நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் இவ்வேளையில், பாராளுமன்ற அமர்வுகளுக்கான கதவுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாகத்தில் ஊழல், மோசடி, திருட்டு போன்றவற்றை அம்பலப்படுத்தி வரும் நாடாளுமன்றக் குழுக்களின் அமைப்பை மாற்றும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் மௌனம் சாதித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டு மக்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் எக்காரணம் கொண்டும் அறிவிக்கப்படாது பாராளுமன்றத்தின் கதவு மூடப்பட்டுள்ளது. மக்களுக்கோ,மக்கள் பிரதிநிதிகளுக்கோ செவிசாய்ப்பதில்லை. மக்களின் பிரச்சினைகள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. முடிவெடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்புக்கு இடமில்லை. மாற்றுக் கருத்துக்கள் கூட கோவிட்  என்ற போர்வையில் அடக்கப்பட்டன. 

இலங்கையின் கௌரவமான அரச சேவை இன்று சீரழிந்த நிலையில் உள்ளது. 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் விளைவாக, நீதித்துறை பதவி உயர்வுகளில் கூட, பாரபட்சமற்ற நீதிபதிகளை ஓரங்கட்டி, அவர்களின் தொழில் வாழ்க்கையை சீரழித்து எடுக்கப்படும் முடிவுகளை ஊடகங்களில் பார்க்கிறோம். ஊழல் மற்றும் பிற சட்ட விரோத வழக்குகளை தள்ளுபடி செய்து விடுவிப்பது குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்படுவதைப் பார்க்கிறோம். இந்நிலையில் இலங்கை,சர்வதேச ரீதியாக ஜனநாயக நாடு என்ற கண்ணியமான பிம்பம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது என்பது இரகசியமல்ல. இந்நிலைமை நமது நாட்டின் முன்னேற்றத்திலும் குறிப்பாகப் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைச் சொல்ல வேண்டிய தேவையில்லை. பொறுப்புள்ள குடிமக்களால் அமைதியாக இருந்து தாய்நாட்டை இவ்வாறு சீரழிக்க அனுமதிக்க முடியாது.பொது மக்களுக்கு உணர் திறனாக ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் நாடாக, எங்களுக்குரிய பாரம்பரிய ஸ்தானத்திற்கு இலங்கையை உயர்த்துவதற்கு நாம் எமது பொறுப்புக்களை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.