07.02.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01. ஐக்கிய அமெரிக்காவின் லா ஜொல்லா ( La Jolla ) நிறுவனம் மற்றும் ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஆய்வுக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஒப்பந்தங்களை மேற்கொள்ளல்

நோய் எதிர்ப்பியல் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் லா ஜொல்லா ( La Jolla ) நிறுவனம் மற்றும் ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் கற்கை ஒத்துழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஆய்வுக் கருத்திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்பு நிதியாக இதுவரை 505,840 அமெரிக்க டொடலர்கள் ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துள்ளது. காச நோயை ஆரம்பகட்டத்திலேயே இனங்காணல், புரிந்து கொள்ளல் மற்றும் குறைத்துக் கொள்வதற்கான ஆய்வு நடவடிக்கைகளை ஊக்குவித்தல் மற்றும் மாணவர்கள் மற்றும் கல்விக் குழுவினரைப் பரிமாற்றம் செய்து தற்போது காணப்படும் கற்கை ஒத்துழைப்புக்களை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கு இருதரப்பினரும் உடன்பாடொன்றை எட்டியுள்ளனர். அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக நிதியளிப்பு ஒப்பந்தம் மற்றும் பொருட்கள் பரிமாற்ற ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இலங்கையில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்தை நடைமுறைப்படுத்தல்

இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்தை நிறுவுதலை தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமாக முன்னுரிமை வழங்கி நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உயிரியல் அளவீட்டுத் தரவுகளின் அடிப்படையில் தனிநபர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் உபகரணம், இணையவெளியில் தனிநபர்களின் தனித்துவ அடையாளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய டிஜிட்டல் கருவி மற்றும் குறித்த இரண்டு கருவிகளையும் தொடர்புபடுத்துவதன் மூலம் டிஜிட்டல் மற்றும் பௌதீகச் சூழலில் தனிநபர் அடையாளத்தை திட்டவட்டமாக உறுதிப்படுத்தக் கூடிய அடையாளங் காணல் முன்மொழியப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்தின் கீழ் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இந்தியாவின் கௌரவ பிரதமர் மற்றும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இலங்கையில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய, குறித்த நிதியளிப்பை பெற்றுக்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காகவும் ஏற்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், குறித்த நிதி வழங்கலின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் தொழிநுட்ப அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. மகாவலி நக்கல்ஸ் சேதன விவசாய வலயத்திற்கான சேதன உரத் தயாரிப்பு நிலையத்தை அமைத்தல்

மொரகஹகந்த, களுகங்கை மகாவலி 'எஃப்' வலயம் சேதன விவசாய உற்பத்திகளை மேற்கொள்கின்ற நிலைபேறான வலயமாக இலங்கை மகாவலி அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. நஞ்சற்ற சேதன உள்ளீடுகளைப் பயன்படுத்தி விவசாயப் பயிரிடல் மூலம் விவசாய சமூகத்தின் வருமானங்களை அதிகரிப்பதற்கும், சேதன விவசாயம் தொடர்பாக உயர் திறன்களுடன் கூடிய விவசாய சமூகத்தவர்களின் பங்களிப்புடன், தேசிய சேதன விவசாயப் பயிர் உற்பத்திகளின் இலக்கை அடைவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. நீண்டகாலமாகப் பயிரிடுவதற்குத் தேவையான சேதனப் பசளையைக் குறித்த பிரதேசத்திலேயே உற்பத்தி செய்துகொள்ளும் நோக்கில் சேதன உர நிலையங்கள் இரண்டும் தேவையான ஆய்வுகூட வசதிகளுடன் வெல்லேவெல மற்றும் குருவெல போன்ற மகாவலிப் பிரிவுகளில் நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக வெல்லேவெல சேதன உர உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன்மூலம் வருடாந்தம் 2,000 மெற்றிக்தொன் சேதன உரத்தைத் தாயாரிக்க முடியுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சேதன உர நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை நேரடி ஒப்பந்தமாக பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகத்திற்கு ஒப்படைப்பதற்காக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. முதலீட்டுப் பிணக்குகள் தொடர்பான மேல் நீதிமன்ற சட்டம்

இலங்கையில் முதலீடுகளுக்கு நட்புறவுமிக்க சட்ட ரீதியான சூழலை ஏற்படுத்த வேண்டிய சட்ட மறுசீரமைப்புக்களை சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சின் விசேட அலகொன்றின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள வர்த்தக சட்ட மறுசீரமைப்பு உபகுழுவுக்கு நீதி அமைச்சர் அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய, குறித்த குழுவானது 100 மில்லியன் ரூபாய்கள் அல்லது அதற்கு அதிகமான முதலீடுகளில் மேலெழுகின்ற, 50 மில்லியன் ரூபாய்கள் நிதி வரையறை கொண்ட 'பிணக்குகள்' தொடர்பாக வழக்கு விசாரணை செய்து தீர்மானிக்கக் கூடிய நீதிமன்ற அதிகாரத்துடன் கூடிய முதலீட்டுப் பிணக்குகள் தொடர்பான மேல் நீதிமன்றத்தை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக ஏற்பாடுகளை உள்வாங்கி சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. புதிய இசைவுத் தீர்ப்பு ( Arbitration ) சட்டத்தை அறிமுகப்படுத்தல்

இலங்கையில் இசைவுத் தீர்ப்பு விடயங்கள் பற்றி ஆராய்ந்து புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை, நீதி அமைச்சின் விசேட அலகொன்றின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள வர்த்தக சட்ட மறுசீரமைப்பு உபகுழுவால் அடையாளங் காணப்பட்டுள்ளது. இலங்கையில் பாரியளவிலான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கக் கூடிய வகையிலான இசைவுத் தீர்ப்புக் கட்டத்திலேயோ அல்லது இசைவுத்தீர்ப்பு அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் கட்டத்திலேயோ சமகாலத்தில் காணப்படும் தடைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இசைவுத்தீர்ப்புச் ( Arbitration ) சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. அதிபர் - ஆசிரியர் சம்பள ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை பிரிவெனா ஆசிரியர்கள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விசேட உதவிப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் ஏற்புடையதாக்கிக் கொள்ளல்

அதிபர் - ஆசிரியர் சம்பள ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கமைய வெளியிடப்பட்டுள்ள பொது நிர்வாக சுற்றறிக்கை 03/2016( IV) இல் ஏற்பாடுகளை பிரிவெனா ஆசிரியர்கள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விசேட உதவிப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் ஏற்புடையதாக்கிக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.