படம் - லங்காதீப

புத்தளம் மாவட்டம், மாறவில, வடக்கு முதுகடுவ பிரதேசத்தில் மீனவர்கள் சிலர் படகுகளை நிறுத்துவதற்கான இடமொன்றை ஒதுக்கி தருமாறு கோரி தம்முடைய படகுகளை கடலில் மிதக்க விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், புனித அந்தோணியார் தேவாலயத்தில் வழிபாடுகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் தம்முடைய உறவினர்களுடன் தேவாலயத்திற்கு முன்பாக அமைதி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

கடந்த பல அரசாங்கங்களின் ஆட்சியின் போது தமது படகுகளை நிறுத்துவதற்கான இடமொன்றை தருமாறு கோரிக்கை விடுத்த போதும் அது நிறைவேற்றப்படவில்லை என்று குறித்த மீனவர்கள் தெரிவித்தனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.