ஜம்புப் பழம் ஒன்று தொண்டையில் சிக்கியதில் 08 வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக வாரியபொல வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த குழந்தை குருநாகல் மாவட்டம், நாரம்மல, தங்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த தெனுஷி கேசலா இந்துரங்கொட என்ற பெயருடைய குழந்தை என்று தெரியவருகிறது.
குழந்தையின் உடல் வைத்திய பரிசோதனை நடவடிக்கைகளுக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. (Siyane News)