(கரீம் ஏ. மிஸ்காத் புத்தளம்)

புத்தளம் பிரதேசத்தில் கடும் மழை.

------------------------------------------

புத்தளம் பிரதேசத்தில் இன்று காலையிலிருந்து தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கி நிறைந்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் முதல்  க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை நடைபெற்று வருகின்றது.

புத்தளம் பகுதியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளில் மழை நீர் பரீட்சை  மண்டபங்களுக்குள் புகுந்ததனால்,  குறித்த மண்டபங்களில் பரீட்சை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும் மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக பாடசாலைகளில் மழை நீர் புகாத மாற்று இடங்கள் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.

கடும் மழையால் பாதிக்கப்பட்ட சில பரீட்சை நிலையங்களில் பரீட்சை சற்று தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதோடு அதற்காக உரிய நேரமும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 பு/இந்து தேசிய பாடசாலைகளில் மாணவர்கள் பரீட்சை எழுதிய பின்னர் படகுகளின் மூலம்  வெளியே அழைத்துவரப்பட்டனர்.

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட போது இராணுவத்தினர் தமது உதவியை வழங்கினர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.