அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு தாமும் ஆதரவளிக்கவுள்ளதாக முன்னாள் நிதிஅமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மல்வானை சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 21 ஆவது அரசிலமைப்பு திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த திருத்தம் உங்களுக்காக கொண்டுவரப்படுகின்றதா என முன்னாள் நிதி அமைச்சரிடம் ஊடகவியலாளர் தொடர்ந்தும் கேள்வி எழுப்பினார்

இந்நிலையில் காய்க்கின்ற மரத்திற்கே கல்லெறியப்படும் என அவர் பதிலளித்ததுடன், அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

Tamil Mirror 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.