கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அஸ்மி, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

22.07.2022 திகதியிடப்பட்ட G/EPC/A/GVR/Appt(291) இலக்க கடிதம் மூலம் 25.07.2022 ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வரையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக கல்முனை மாநகர சபையின்  தற்போதைய ஆணையாளராக செயற்படும் எம்.சி. அன்சார், கடந்த ஏப்ரல் மாதம் இடமாற்றம்  செய்யப்பட்டு குறித்த பதவிக்கு  பொறியியலாளர் ரி.சிவலிங்கம்   நியமிக்கப்பட்டார்.

எனினும், கல்முனை பிரதேசத்திலுள்ள சில அரசியல்வாதிகளினால் அவர் பதவியேற்காமல் பலவந்தமாக தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மீண்டும் அன்சார், கல்முனை மாநகர ஆணையாளராக செயற்பட்டார்.

இந்த நிலையில், இலங்கை நிர்வாக சேவையின் முதல் வகுப்பினைச் சேர்ந்தவரான அஸ்மி, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் பதவியிலிருந்து கல்முனை மாநகர ஆணையாளர் பதவிக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளராகவே தன்னை நியமிக்குமாறு அஸ்மி வேண்டுகோள் விடுத்த நிலையில், நிரந்தர ஆணையாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.