குரங்கு அம்மை தொற்று இலங்கையிலும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குரங்கு அம்மை தொற்று தொடர்பிலான தகவல்களை உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ச்சியாக சுகாதார அமைச்சுடன் பகிர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நோய் தொடர்பான அறிகுறிகளுடன் அடையாளம் காணப்படும் நோயாளிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் மூலமே இதனை அடையாளம் காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக