ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியை அமெரிக்கா கொன்றுவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.


11 ஆண்டுகளுக்கு முன்பு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதில் இருந்து அல்கொய்தா அமைப்பிற்காக சர்வதேச அளவில் தோன்றிய ஒரே தலைவராக ஜவாஹிரி அறியப்படுகிறார்.

ஆப்கானிஸ்தானின் காபூலில் பாதுகாப்பான வீட்டில் இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜவாஹிரி தனது 71 வயதில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.