அமைக்கப்படவுள்ள சர்வகட்சி அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பாக அமைச்சுப்பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கு அக்கட்சியின் சில உறுப்பினர்களின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஒரு பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பிரசன்ன ரணதுங்க, ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன், ரோஹித அபேகுணவர்தன, சீ.பி.ரத்நாயக்க, பவித்ரா, சந்ரசேன, நாமல் ராஜபக்ச, ரமேஷ் பதிரண, பந்துல குணவர்தன, சனத் நிஷாந்த மற்றும் கஞ்சன ஆகியோர் சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - Siyane News 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.