(இப்ஹாம் நவாஸ்)

வேலையற்ற அரச சேவையாளர்களை முகாமைத்துவம் செய்வதற்கு டிஜிட்டல் தலைமைத்துவ என்னக்கருவை பயன்படுத்துங்கள் என டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆலோசகர் புலஸ்தி வன்னிஆராச்சி அவர்கள் கூறியுள்ளார். அவர் தமது கருத்தை தெரிவிக்கும் போது "எந்தவொரு வேலையும் இல்லாத அரச பணியாளர்கள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் அரச சேவையினுள் காணப்படுவதாக அரச முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயதுன்ன அவர்கள் கூறுகிறார். 16 இலட்சத்திற்கு அண்மித்த அரச பணியாளர்கள் உள்ளார்கள் எனில், அவர்களை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கே
உள்ளனர்.

முறைசாரா அரசியல் நியமனங்கள் ஊடாக அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டவர்களானலும், அவர்களை வீட்டிற்கு அனுப்ப முடியாது. அவர்களும் இந்நாட்டின் மக்களே. இதற்காக பொறுப்புக்கூற வேண்டியது அரசியல் அதிகாரமும், அரச சேவையில் இவ்வாறான நியமனத்தை ஏற்படுத்திய அரச அதிகாரிகளும் என்ற இரண்டு பிரிவினருமே. மீண்டும் இணைத்துக்கொள்வதை மட்டுப்படுத்துவதுடன், இருப்பவர்களை முகாமைத்துவம் செய்வதற்கு  டிஜிட்டல் தலைமைத்துவ என்னக்கருவை பயன்படுத்த முடியும். தேவையற்ற இடங்களில் உள்ள பணியாளர்களை, பணியாளர்களை அற்ற இடங்களுக்கு மாற்றீடு செய்யவேண்டும். சில நிறுவனங்களை சரியான புரிதலுடன் நோக்கினால் புதிய வேலைவாய்ப்பு பிரிவுகளை ஏற்படுத்த முடியும். அபிவிருத்தி அடைந்த நாடுகளிலுள்ள பல நிறுவனங்கள் டிஜிட்டல் தலைமைத்துவ முறையை பயன்படுத்துகின்றனர். எங்கள் நாட்டிலுள்ள அதிகாரிகளும் இந்த முறைகளை கற்கவேண்டும். யாரும் செய்யும்வரை பார்த்துக்கொண்டு இருக்காமல் தாமாகவே இயங்குவது முக்கியமானதாகும். தமது நிறுவனத்தின் மேல்நிலையிலிருந்து கீழ்நிலை வரையிலான அதிகாரிகளை இதற்காக வேண்டி ஈடுபடுத்துவதும், ஊக்கப்படுத்துவதும் நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகும். அரசியல் அதிகாரத்திற்கு மாத்திரம் இதனை செய்யமுடியாது. ஏனைய பல அரசியல்வாதிகளைப் போன்று அரச அதிகாரிகளுக்கும் டிஜிட்டல் முறை தொடர்பான புரிதல் இல்லை. ஒரு வசனத்தை பிடித்துக்கொண்டு எங்கே ஓடும் நிலைமையே உள்ளது. தெரியாது என்றால் தெரிந்தவர்களிடம் கற்றுக்கொள்வது பெறுமதியானதாகும்."

டிஜிட்டல் தலைமைத்துவத்தினுள் உள்ள அம்சங்களாக Communication - தொலைத்தொடர்பு , Vision - நோக்கு  Digital Literacy - டிஜிட்டல் கல்வியறிவு, Strategy - மூலோபாயம், Innovation - புத்தாக்கம், Risk-Talking - ஆபத்து தொடர்பான கலந்துரையாடல், Risk Taking - சாவல் எடுத்தல், Adaptability - தகவமைப்பு, Talent Spotting - திறமை கண்டறிதல் போன்றவை இடம்பெறுகின்றன. பழமைவாத கட்டுபாட்டுக்குள் இருந்து விலகி புதிய தொழிநுட்பத்துடன் திறமைகளை ஒன்றுசேர்த்து மற்றும் நேர்மறை சிந்தனைகளுடன் முன்னோக்கிச் சென்றால் நாடு என்ற ரீதியில் இதனைவிடவும் வெற்றியை பெற்றுக்கொள்ள முடியும் என புலஸ்தி வன்னிஆராச்சி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.