ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி கூட்டுறவு சட்டகம்(UNSDCF)  2023 – 2027 ஆனது இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை ஐக்கிய நாடுகளால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள அனைத்து ஐநா முகவர் அமைப்புகளினதும் செயற்பாடுகளை வழிநடத்தும் சட்டகம் UNSDCF என்பதோடு, நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் ஒட்டுமொத்த நோக்கம் மற்றும் பங்களிப்பையும் இது ஒருங்கிணைக்கும்.

இக் கூட்டுறவு சட்டகமானது பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதனோடு இணைந்த கொவிட் 19 பாதிப்புகள் என்பவற்றிலிருந்து வேகமாக மீளெழுச்சி பெறுவதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக, பொருளாதாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான ஒத்துழைப்பு, சமூக சேவைகள், நியாயமான தொழில், சமூக ஒருங்கிணைவு, மற்றும் இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்கும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு என்பவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும்.
(UNSDCF) ஆனது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஐக்கிய நாடுகளின் சார்பில் ஐநாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹெம்டி ஆகியோரால் இணைந்து கையொப்பமிடப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.