முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வரின் 05வது வருட நினைவு தின நிகழ்வு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணிகளின் சம்மேளன தலைமைகத்தில் நேற்று (31) நடைபெற்றது.
பிரதம அதிதியாக இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஸுஹைர் முஹம்மத் ஹம்தல்லாஹ் கலந்து கொண்டார்.
நினைவுப் பேருரையை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க நிகழ்த்தினார்.
பல பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், தெரிவு செய்யப்பட்ட சில மாணவர்களுக்கு மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வர் நினைவாக புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டது.
நன்றியுரையை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் சியன ஊடக வட்டத்தின் தலைவருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் நிகழ்த்தினார். - சியன நியூஸ்
படங்கள் - அஷ்ரப் ஏ சமத்