(இஸட்.ஏ.றகுமான்)

ஒலுவில் சஹ்வா பெண்கள் அறபிக்கல்லூரியிலிருந்து கலைப்பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய 25 மாணவிகளில் 25 மாணவிகளும் சித்தியடைந்துள்ளதுடன் 21 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான தகுதியைப் பெற்றுள்ளனர். 

மேலும் 04 மாணவிகள் அனைத்துப்பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் 100 சதவீத சித்தியுடன் 84 சதவீத பல்கலைக்கழக நுழைவுக்கான சித்தியையும் பெற்று இம் மாணவிகள் இக்கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவிகள் அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.

ஒலுவில் சஹ்வா பெண்கள் அறபிக்கல்லூரி இலங்கை முஸ்லிம் மாணவிகளுக்கான மார்க்கக் கல்வியை கற்பிக்கும் முன்னோடிக் கல்லூரிகளில் ஒன்றாகும். மேலும் இக்கல்லூரி உலகக் கல்விக்கான சிறந்த வாய்ப்பினையும் மாணவிகளுக்கு வழங்கி வருகிறது. அதனை நிருபிக்கும் வகையிலே 2021 (2022)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவு மிகவும் சிறந்த நிலையில் காணப்படுகின்றது. 

பலதரப்பட்ட சவால்களுக்கும், நாட்டின் நெருக்கடிகளுக்கும் மத்தியில் பரீட்சை எழுதி சித்தியடைந்த  மாணவிகள் அதற்கு உதவிய பெற்றோர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியின் நலன் விரும்பிகள் என அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.