இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களில், முறையான வழிகளில் பணம் அனுப்புனர்கள் , மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் திட்டம் அண்மையில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு முதல் மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை இன்று வழங்கியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தியோகபூர்வ வழிகளில் நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அண்மையில் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.