புத்தளம் ஆதார வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுமித் தெரிவித்தார்.
24 வயதான பெண் ஒருவருக்கு இவ்வாறு ஒரு ஆண் குழந்தையும் மற்றும் மூன்று பெண் குழந்தைகளுமாக நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
தற்போது, குறித்த நான்கு குழந்தைகளும் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணரின் மேற்பார்வையில் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.