பிரித்தானியாவின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்ள்ஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று(10) அறிவிக்கப்பட்டார்.

பிரித்தானியாவின் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர் மூன்றாம் சார்ள்ஸ்தான். பிரித்தானியாவின் அரச தம்பதி மறைந்த பிலிப் – ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் சார்ள்ஸ் புதிய மன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற எளிய விழாவில், மன்னராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார் மூன்றாம் சார்ள்ஸ்.

எலிசபெத்தின் மறைவையடுத்து, பட்டத்து இளவரசரான சாா்லஸ் (73) பிரித்தானியாவின் அடுத்த மன்னரானார். பிரித்தானியாவின் அரச வம்ச சட்டத்தின்படி மூத்த மகனும், இளவரசருமான சாா்ள்ஸ் உடனடியாக அடுத்த மன்னரானார். இந்நிலையைில் இன்று(10) அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவா் 3ஆவது சாா்ள்ஸ் என அழைக்கப்படுவாா் என்றும் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.