நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 3 முதல் 5 நாட்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பழுதுபார்க்கும் பணிகள் முடியும் வரை மின் உற்பத்தியை நிர்வகிக்க எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தொழிநுட்பக் கோளாறு காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.