பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் கட்சிகளின் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில், ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின்  பெயர் அறிவிக்கப்படவுள்ளது.

கூட்டணியில் இணையும் கட்சிகளின் தலைவர்கள் அந்த கூட்டணியின் கொள்கை அறிக்கையில் கையெழுத்திட உள்ளனர். பின்னர், கூட்டணியின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படவுள்ளனர்.

இந்த கூட்டணியின் தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி என்பன அங்கம் வகிக்கவுள்ளன.
 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.