இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய அரசியலமைப்பு இன்று (செப்டம்பர் 22) நடைபெற்ற விசேட மகாசபை கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை விட அதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.ஒரு லீக்கிற்கு மூன்று வாக்குகள் வீதம் வழங்குவது தொடர்பான சரத்துக்கு ஆதரவாக 48 வாக்குகள்  அளிக்கப்பட்டதோடு எதிராக வாக்குகள் எதுவும் அளிக்கப்படவில்லை.  13 பேர் வாக்களிக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.இந்த சரத்து தவிர மற்ற அனைத்துக் சரத்துகளுக்கு ஆதரவாக 61 வாக்குகள் கிடைத்ததோடு எவரும் எதிராக வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 வத்தளை பெகசிஸ் ஹோட்டலில் இந்த  விஷேட பொதுச் சபைக் கூட்டம் இடம்பெற்றது.யாப்பு வரைவை மேற்பார்வை செய்வதற்காக  சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் இரு பிரதிநிதிகளும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் இந்த  பொதுக் கூட்டத்தில்  கலந்துகொண்டனர்.  

இந்த புதிய யாப்பு நிறைவேற்றப்பட்டதையடுத்து   விளையாட்டுத்துறை  அமைச்சரின் விசேட அனுமதியைப்  பெற்று 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதியன்று   நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.தேர்தலையொட்டி ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மற்றும நிர்வாக அதிகாரி ஒருவர் உள்ளிட்ட சுயாதீன தேர்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.


ஜஸ்வர் உமர்

தலைவர்

இலங்கை கால்பந்து சம்மேளனம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.