(இஸட்.ஏ.றகுமான்)

ஒலுவில் அல்-ஹம்றா தேசிய பாடசாலையின் 2021 (2022) உயர்தரப் பரீட்சை முடிவு சிறந்த நிலையில் காணப்படுகிறது. பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 62 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 36 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான தகுதியைப் பெற்றுள்ளனர். 

அந்தவகையில் மருத்துவத்துறைக்கு - 01 மாணவரும் பொறியியல் துறைக்கு- 02 மாணவர்களும் உயிரியல் மற்றும் பௌதிகவியல் துறைக்கு (டீளுஉ) - 23 மாணவர்களும் கலைப்பிரிவிற்கு - 08 மாணவர்களும் வர்த்தகப்பிரிவிற்கு - 02 மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லவுள்ளனர்.

பலதரப்பட்ட சவால்கள் நாட்டின் நெருக்கடிகளுக்கு மத்தியில் பரீட்சை எழுதி சித்தியடைந்த  மாணவர்கள் அதற்கு உதவிய பெற்றோர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம் என அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.