(எம்.ஐ.அப்துல் நஸார்)

மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திற்குற்பட்ட மீரா பாலிகா மகா வித்தியாலய (தேசிய பாடசாலையில்) 10 கோடி செலவில் அமைக்கப்பட்ட கிழக்கின் முதலாவது மின் உயர்த்தியுடன் கூடிய மூன்று மாடி பாடசாலை கட்டடம் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது.


10 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிழக்கின் முதலாவது மின் உயர்த்தியுடன் கூடிய மூன்று மாடி பாடசாலை கட்டடம்; இன்று திங்கட்கிழமை (05) காலை திறந்து வைக்கப்பட்டது.


பாடசாலை அதிபர்; அஷ்ஷெய்க் யூ.எல். மன்சூர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று கட்டடத்;தினை திறந்து வைத்தார்.

நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


இதன் போது கடந்த வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சகல துறைகளிலும் உயர் சித்தி அடைந்த மாணவிகள் கொளரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.


நிகழ்வின் போது கட்டடத்தினை அமைப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.