பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தைக்கு சூரிய சக்தி படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை, தியத்த உயன மற்றும் அக்கொன, ஹீனடிகும்புர முதல் வெள்ளவத்தை வரையில் சூரிய சக்தியில் இயங்கும் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த படகு சேவையின் மூலம் பத்தரமுல்லை தியத்த உயன மற்றும் ஹீனடிகும்புரவிலிருந்து வெள்ளவத்தையை 30 நிமிடங்களுக்குள் சென்றடையலாம்.

படகு சேவை தினசரி அலுவலக நேரங்களில் இடம்பெறும். படகொன்றில் எட்டு பேர் வரை பயணிக்க முடியும். பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தை வரை பயணிக்க 200 ரூபாவும் அக்கோன, ஹீனடிகும்புர முதல் வெள்ளவத்தை வரை 200 ரூபாவும் கட்டணமாக அறவிடப்படும்.

பத்தரமுல்லை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், சர்வதேச பாடசாலைகள், திறந்த பல்கலைக்கழகம், 176, 138, 122 பேருந்து வழித்தடங்கள் மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு இந்த படகு சேவை மூலம் இலகுவாக சென்றடைய முடியும் என நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.