மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும்  மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் 
****************************

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

வங்காள விரிகுடாவின் மத்தியில் நிலைகொண்டிருந்த சக்தி வாய்ந்த  தாழ் அமுக்கமானது சூறாவளியாக தீவிரமடைந்துள்ளது.இதற்கு தாய்லாந்து அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட " சிட்ரங் " எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இன்று இது மேலும் தீவிரமடைந்து பலமிக்க சூறாவளியாக வடக்கு ‐ வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும் . நாளையளவில் வங்காள தேசத்தின் கரையை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 km வேகத்தில் காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 80 km ஆக அதிகரித்தும் காணப்படும். இக் கடல் பிராந்தியங்கள் மிகவும்  கொந்தளிப்பாக் காணப்படும். இதேவேளை இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். 

ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு நாளை வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.