கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு, போருத்தொட்ட (பலகத்துறை) சுலைமானியா - முனவ்வரா பாலர் பாடசாலையின் 37வது வருட பூர்த்தி விழாவும் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  அல் பலாஹ் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

அதிபர் ரிஸ்மினா இஸ்லாஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலகத்துரை பள்ளி வாசல் நிர்வாக சபை தலைவர் அல் ஹாஜ் கலீல்  அவர்கள் பிரதம அதீதியாக கலந்துகொண்டார்.

ஸ்தாபகர் அல்ஹாஜ் எம் எஸ் நிசாம்தீன் மற்றும்  கலாநிதி மௌலவி அப்துஸ் சத்தார் மௌலவி எம் என் நிஸ்தார் ஆகியோரும் அதீதிகளாக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

வழமைபோன்று  இர்ஷாத் ஆசிரியர் அஜ்மல் ஆசிரியர் மற்றும் சப்ரான் ஆகியோர் நிகழ்ச்சிகளை சுவைபட தொகுத்து வழங்கினார்கள்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.