தேசிய சபையல்ல தீர்வு தேர்தலே
தேசிய இயக்கங்கள் அறிவிப்பு 
இதேநேரம் தேசிய சபை ஒரு சர்வகட்சி அரசுக்கு மாற்று அல்ல என்றும் இன்றுள்ள நெருக்கடியைத் தீர்க்க வேண்டுமாயின் உரிய வேலைத்திட்டமாக தேர்லுக்கான திகதி அறிவிக்கப்பட வேண்டுமென தேசிய இயக்கங்களின் கூட்டின் அழைப்பாளர் கலாநிதி குனதாச அமரசேகர தெரிவித்துள்ளார். 
கட்சித் தலைவர்களுக்கு தேசிய இயக்கங்களின் கூட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறி ஆறு மாதங்களாகின்றன. அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அதிகாரத்தை கைப்பற்றல் என்பன பரீட்சார்த்தமாக இடம்பெற்றுள்ளன என்றும் இதுவரை பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உபாய வழி ஒன்றை முன்வைப்பதற்கு அரச தவறவிட்டது. அதிலிருந்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்ற தேவை அரசுக்கு இல்லை. இந்த நிலையில் நாட்டில் காணப்படும் ஸ்திரமற்ற நிலையைப் பயன்படுத்தி தெரிந்தோ தெரியாமலோ வெளிநாட்டுத் தலையீடு ஒன்றுக்கு வழிவகுக்கலாம். ஒரு ஸ்திரமான வேலைத்திட்டத்தோடு தேர்தலுக்கு காலம் அறிவிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் அரசு சகலதுக்கும்  தீர்வு தேசிய சபை என்று கூறி அச்சபையை அமைத்துள்ளது என்றும் அமரசேகர தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.