பேருவளை நியூஸ் அலர்ட் வலையமைப்பின் இரண்டாம் ஆண்டு பூர்த்தி விழா, பரிசளிப்பு விழா மற்றும் முதலாவது உதய வான்மதி சஞ்சிகை வெளியீட்டு விழா கடந்த 22 ஆம் திகதி பேருவளை , சீனங்கோட்டை அல் ஹுமைசரா தேசியப் பாடசாலை - ஜாபிர் ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக  மலேஷியா சைன் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பொருளாளரும் ஆன DR .Azhar azahim (azhary) அவர்களும்,கௌரவ விருந்தினராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை தலைமை ஆலோசகர் அல்ஹாஜ் M.Z.M AHAMED MUNAVVAR  அவர்களும் , சிறப்பு பேச்சாளராக முன்னாள் அதிபர் மற்றும் எழுத்தாளர்  ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்களும்,

பேருவளை நகர பிதா மஸாஹிம் முஹம்மத் அவர்களும், BERUWLA NEWS ALERT இன் ஆலோசகர் B.S.M ஸியாஸ் மற்றும் அல்ஹாஜ் ஸவாஹிர் அவர்களும் , இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக் அவர்களும், களுத்துறை மாவட்ட முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் ஹிஷாம் சுஹைல் அவர்களும், பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹசீப் மரிக்கார் அவர்களும்  பேருவளை, zam ரிபாய் ஹாஜியார் பாடசாலை அதிபர் மற்றும் பேருவளை பாசியதுல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபரும் இன்னும் பல சிறப்பு அதிதிகள் மற்றும் ஆசிரியர்கள் , மாணவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

BERUWALA NEWS ALERT நிர்வாகத்தின் பணிப்பாளர்  SABITH DHULFIKAR  அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

செயலாளர்  பாத்திமா ஹஸ்னத்  கபீர், உப செயலாளர் 

ஹிஸ்னி அஹமட், மற்றும் பொருளாளர் உஸாமா  நவாஸ் ஆகியோர் உரைகள் நிகழ்த்த சக நிர்வாக உறுப்பினர்கள் நிகழ்வை சிறப்பித்தனர்.

மேலும் பேருவளை  மஹகொடை  அஹதியா பாடசாலை , மக்கொன அஹதியா பாடசாலை மற்றும் பேருவளை அல் பாஸியதுள் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவர்கள் கண்குளிரும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி மேடையினை அலங்கரித்தனர்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.