கல்வியமைச்சின் கீழுள்ள பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அபிவிருத்தி உதவியாளர்களை சேர்த்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு அமைச்சரவையின் அனுமதியைக் கோரவுள்ளது. 
தற்போது சேவையிலுள்ள அபிவிருத்தி உதவியாளர்களை போட்டிப் பரீட்சை நடாத்தி ஆசிரியர்களாகச் சேர்த்துக் கொள்வதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
அரசின் புதிய ஓய்வூதிய வயது 65 லிருந்து 60 ஆகக் குறைந்திருப்பதனால் வரும் இறுதியில் 8000 ஆசிரிய வெற்றிடங்கள் ஏற்படவுள்ளன. 
இது தவிர 3000 அதிபர் வெற்றிடங்களும், 100 கல்விச் சேவை உத்தியோகத்தர் வெற்றிடங்களும், 92 நிர்வாக சேவை வெற்றிடங்களும் ஏற்படவுள்ளன. 
3000 ஆசிரியர்கள் ஓய்வு பெறுவது வழமைக்கு மாற்றமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. இது பாடசாலைக் கல்வியை வெகுவாகப் பாதிக்கும் என்பதனால் தற்போது பாடசாலைளில் பணிபுரியும் அபிவிருத்தி உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தீர்மானித்துள்ளார். 
இதன்படி அபிவிருத்தி உதவியாளர்களுக்கான போட்டிப் பரீட்சை மாகாண மட்டத்தில் நடத்தப்படவுள்ளது. 
இதேநேரம் கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் 8000 பேர் அடுத்த மாதம் பயிற்சியை முடித்து வெளியேறவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்தார். 
அவர்களும் வெற்றிடமாகவுள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளார்கள். 

ஓய்வு பெறும் வெற்றிடங்களுக்கு அபிவிருத்தி உதவியாளர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். 8000 ஆசிரியர்கள், 3000 அதிபர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.