உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மா வகைகளின் விலைகளும் நாளை முதல் அதிகரிக்கப்படும் என்று உள்நாட்டு பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 400 கிராம் முழு ஆடைப்பால் மா, 1 கிலோகிராம் முழு ஆடைப்பால் மா மற்றும் ஆடை நீக்கிய பால்மா என்பவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளதாக உள்நாட்டு பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய விலை அதிகரிப்பை தொடர்ந்து புதிய விலை மாற்றம் இவ்வாறே இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

400 கிராம் முழு ஆடைப்பால்மா 100 ரூபாய்களால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 950 ரூபாய்களாக மாற்றமடையும்.

1கிலோ கிராம் முழு ஆடைப்பால்மா 230 ரூபாய்களால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 2350 ரூபாய்களாக மாற்றமடையும்.

400 கிராம் ஆடை நீக்கிய பால்மா 210 ரூபாய்களால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 1050 ரூபாய்களாக மாற்றமடையும்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.