கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலயம் அத்தனகல்லையில் 33 பாடசாலைகளுக்கிடையே மேற்கொண்ட பாடசாலை த.பொ.த சாதாரண தர பெறுபேற்று புள்ளிவிபரத்தின் அடிப்படையில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது. 

இம்முறை வெளிவந்த க.பொ.த சாதாரண தரப்பெறுபேற்றின் அடிப்படையில் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலயம் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட பாடசாலையாக  குறிப்பாக அத்தனகல்ல பிரதேசத்தில் காணப்படும் பிரபல பாடசாலைகளின் பெறுபேற்று புள்ளிவிபரத்தின் அடிப்படையில் 33 பாடசாலைகளில் நான்காவது இடத்தை பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.

கம்பஹா பண்டாரநாயக்க மத்திய கல்லூரி 100% சித்தியை பெற்று முதலாவது இடத்திலும்,நிட்டம்புவ சங்கபோதி மத்திய கல்லூரி 99.44% வீதத்தை பெற்று இரண்டாம் இடத்திலும்,வித்தியாலோகா மகாவித்தியாலயம் 95% சித்தி வீதத்தை பெற்று மூன்றாம் இடத்திலும், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலயம் 90.48% சித்தி வீதத்தை பெற்று நான்காம் இடத்திலும் பட்டியல் வரிசையில் இடம்பிடித்துள்ளன.

மேலும் இந்த பெறுபேற்று புள்ளிவிபரப்படி இஸ்லாம், வரலாறு, ஆங்கிலம், சிங்களம், தமிழ் இலக்கியம், மற்றும் சுகாதார பாடங்களில் இப்பாட சாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றியோர்கள் 100% சித்தியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நன்றி - கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீசியல்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.