குழந்தைகள் பிறக்கும்போதே சில உணர்ச்சிதேவைகளுடன்தான் பிறக்கின்றார்கள் .அவர்கள் நேசிக்கப்படுவதை அவர்கள் உணர வேண்டும் . குழந்தைகளுக்கு நேர்மறையான சுயமரியாதை தேவை.  பெற்றோர்கள் குழந்தைகளின்  தேவைகளை பற்றி அறிந்திருப்பது முக்கியமான ஒரு விடயமாகும். உங்கள் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை கவனத்தில் கொள்வது பெற்றோரின் கடமையாகும் .



குழந்தைகளுக்கு வலுவான அன்புத் தேவை உள்ளது ,குழந்தைகள் எல்லா விடையங்களிலுமே பெற்றோர்களையே சாந்திருப்பார்கள் .பெற்றோர்கள் அளிக்கும்  அன்பு மற்றும் அவர்கள்மீதான கவனம்  மற்றவர்களிடம் நம்பிக்கையை வளர்க்கவும், தன்னை நேசிக்கவும், உலகில் பாதுகாப்பாக உணரவும் குழந்தைகளுக்கு  உதவுகிறது.




குழந்தைகள் வளர வளர, அவர்களுக்கு பெற்றோரின் அன்பும் கவனமும் தொடர்ந்து தேவைப்படுகிறது. பிள்ளைகளின் ஒவ்வொரு  வயதிலும் அவர்கள் அனுபவிக்கும் எல்லா விடயங்களுக்கும்பெற்றோர்களின் ஆதரவினை  கட்டாயம் எதிர்பார்ப்பார்கள் .



உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது உங்களுக்கு அவர்களின் மீது அக்கறை இருப்பதாக உணரச்செய்யும் . ஒரு குழந்தைக்கு, நேரம், கவனம் , அன்பு என்ற அடிப்படை தேவைகள் சரியாக கிடைக்க பெறுகின்றது என்பதில் பெற்றோரோக்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் 




-குழந்தைகள் அழைக்கும் போது  அவர்களுக்கு நல்ல முறையில் பதிலளிப்பது 

-அவர்களுடன் பேசும் பொது அவர்களின் முகத்தை பார்த்து பேசுவது 

- அவர்களின் கேள்விகளுக்கு ஆர்வத்துடன் பதிலளிப்பது 

இவ்வாறு பல்வேறு பட்ட செயல்களின் மூலம் அவர்கள் உங்களுக்கு முக்கியமானவர்கள் என்று உணர வைக்க வேண்டும் .



குழந்தைகளின் உணர்வுகளையும் , தவறுகளையும் பெற்றோர்கள்  ஏற்றுக்கொள்கிறீர்கள், நிபந்தனையின்றி அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும். 



குழந்தைகளின் கருத்துகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை பெற்றோர்கள்  ஒப்புக் கொள்ளும்போது அவர்கள் மதிக்கப்படுகிறார்கள் என உணருவார்கள் .


முஹம்மது நஜீம் பாத்திமா நலிபா ✍️


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.