YMMA கஹட்டோவிட்ட கிளையின் வேண்டுகோளின் பிரகாரம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட YMMA பணிப்பாளர் Mr.Nazare kamil இன் முயற்சியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் வறிய மாணவ மாணவிகளுக்கான காலணிகள் (Shoes) கடந்த வெள்ளிக்கிழமை (25) கஹட்டோவிட்ட YMMA கல்விப் பிரிவால் வழங்கப்பட்டது.

கஹட்டோவிட்ட YMMA தலைவர் அல்ஹாஜ் A.B.G.பிர்தவ்ஸினால் இரு பாடசாலைகளினதும் பொறுப்பாசிரியர்களிடத்தில் காலணித் தொகுதி கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சமூகமளித்த கஹட்டோவிட்ட YMMA  செயலாளர் Mr. A. B. M. Ekraam, உறுப்பினர்களான Mr. M. R. M. Ilham, Mr. A. B. M. Saeedh ஆகியோருடன் அல் பத்ரியா மஹா வித்தியாலயம் சார்பாக அதிபர் Mrs. M. B. F. Saleeha (SLPS), ஆசிரியர்களான Mr. Ramzan Sir, Mr. Ramzi Ali Sir, பாடசாலை SDC உறுப்பினர்களான Mr. M. Marwan, Mr. M. Riham ஆகியோரையும், முஸ்லிம் பாலிகா வித்தியாலயம் சார்பாக ஆசிரியர் Mr. M.Imraan Sir ஆகியோரை படங்களில் காணலாம்.

நன்றி : கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீசியல்





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.