400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன.

பணியாளர்களை சுற்றுலா விசா மூலம் அனுப்பி, அதுகுறித்து அவசியமான தகவல்களை வழங்காத 400 நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், இலங்கைக்கு பணத்தை டொலராக கொண்டுவராமல், உண்டியல் முறைமையில் தமது தரகுப் பணத்தைக் கொண்டுவந்த முகவர் நிறுவனங்களும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.