பிக்பேஷ் லீக்கில் அஷ்டான் டர்னரின் அதிரடி அரைசதத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்பர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அபார வெற்றி பெற்றது.


பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பெர்த்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி:

தாமஸ் ரோஜர்ஸ், ஜோ கிளார்க் (விக்கெட் கீப்பர்), பியூ வெப்ஸ்டெர், நிக் லார்கின், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹில்டன் கார்ட்ரைட் காம்ப்பெல் கெல்லாவே, நேதன் குல்ட்டர்நைல், லுக் உட், ஆடம் ஸாம்பா (கேப்டன்), டிரெண்ட் போல்ட். 


பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ், ஆடம் லித், நிக் ஹாப்சன், ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), ஆரோன் ஹார்டி, அஷ்டான் டர்னர் (கேப்டன்), அஷ்டான் அகர், ஜெய் ரிச்சர்ட்ஸன், ஆண்ட்ரூ டை, ஜேசன் பெஹ்ரெண்டார், பீட்டர் ஹாட்ஜோக்ளு.

முதலில் பேட்டிங் ஆடிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியில் யாருமே அதிரடியாக பேட்டிங்  ஆடவில்லை. தொடக்க வீரர்கள் கிளார்க் 30 பந்தில் 33 ரன்களும், தாமஸ் ரோஜர்ஸ் 14 பந்தில் 20 ரன்களும் அடித்தனர். ஸ்டோய்னிஸ் 10 பந்தில் 10 ரன் மட்டுமே அடித்தார்.  கார்ட்ரைட் 32 பந்தில் 36 ரன்கள் அடித்தார். டெயிலெண்டர் டிரெண்ட் போல்ட் 16 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் அடித்ததால் 20 ஓவரில் 135 ரன்களாவது அடித்தது மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி.

136 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஆடம் லித் 30 பந்தில் 35 ரன்கள் அடித்தார். ஹார்டி 17 ரன் மட்டுமே அடித்தார். கேப்டன் அஷ்டான் டர்னர் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 26 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 53 ரன்களை அஷ்டான் டர்னர் விளாச, அவரது அதிரடி அரைசதத்தால் 18வது ஓவரில் இலக்கை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.