பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கும் புலமைப்பரிசில் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்காக நடாத்தப்படும் பரீட்சை - 2022

 மேற்படி பரீட்சை 18 டிசம்பர் மாதம் 2022ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2894 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என இத்தால் அறிவிக்கப்படுகிறது.

 இப் பரீட்சைக்காக விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளினதும் வரவு இடாப்பு உரிய பாடசாலை அதிபர்களுக்குத் தபாலில் தற்போது அனுப்பப்பட்டுள்ளன.

இதுவரையில் இவ் வரவு இடாப்பு ஆவணம் கிடைக்கப்பெறாத பாடசாலைகளின் அதிபர்கள் அவ் ஆவணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கீழே தரப்பட்டுள்ளவாறு செயற்பட வேண்டும்.

 இப் பரீட்சைக்கு நிகழ்நிலை முறைமையின் மூலம் விண்ணப்பித்த பரீட்சார்த்திகளின் விவரங்களடங்கிய அச்சுப்பிரதியுடன், வேண்டுகோள் கடிதமொன்றையும் இணைத்து இத்திணைக்களத்தின் பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேற்றுக் கிளைக்கு உடனடியாக வருகைதந்து அவ் ஆவணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

-பரீட்சை ஆணையாளர் நாயகம்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.