விலங்குகளுடன் புகைப்படங்களை எடுக்க விலங்கியல் பூங்காக்களில் கட்டணம்

விலங்குகளுடன் புகைப்படங்களை எடுக்க விலங்கியல் பூங்காக்களில் கட்டணம்

அத்தாண்டு முதல் விலங்கியல் பூங்காவில் விலங்குகளுடன் புகைப்படம் எடுத்தல் மற்றும் உணவளிக்க தனி டிக்கெட்டை அறிமுகப்படுத்த தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

திணைக்களம் தனது வருடாந்த வருமானத்தை அடுத்த வருடம் அதிகரிப்பதற்காக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

2023 ஆம் ஆண்டிற்கான செயற்த் திட்டத்தின் படி, தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெஹிவளை, பின்னவல மற்றும் ரிதியகம விலங்கியல் பூங்காக்கள் மற்றும் பின்னவல யானைகள் சரணாலயத்தின் அபிவிருத்திக்காக அடுத்த வருடம் 285 மில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்க்கிறது. இந்தத் திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒருங்கிணைந்த நிதி மற்றும் விலங்கியல் பூங்கா மேம்பாட்டு நிதி மூலம் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்