கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்து 3-வது முறையாக மகுடம் சூடியது. 1986-ம் ஆண்டுக்கு பிறகு அர்ஜென்டினா உச்சிமுகர்ந்த முதல் உலகக் கோப்பை இது தான். அத்துடன் கால்பந்து உலகின் சூப்பர்ஸ்டாரும், அர்ஜென்டினா கேப்டனுமான லயோனல் மெஸ்சி முதல்முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்திய பொன்னான தருணமும் இது தான்.

மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. மெஸ்ஸியின் வெற்றியை உலகமே கொண்டாடி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகளுக்கு மெஸ்ஸி பரிசளித்துள்ளார். தோனியின் மகள் ஜிவாவுக்கு தான் கையெழுத்திட்ட அர்ஜென்டீனா அணியின் ஜெர்சியை மெஸ்ஸி பரிசாக அனுப்பியுள்ளார். அந்த ஜெர்சியை அணிந்து இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள தோனியின் மகள், ‘தந்தையை போல் பிள்ளை’ எனக் தோனியின் மகள் ஜிவாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.