உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் போது மாத்திரம் ஒரே அளவிலேயே வாக்குச் சீட்டு அச்சிடப்படும் எனவும், ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் வாக்குச் சீட்டின் அளவு குறைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாக்குச் சீட்டுகளை அச்சிட எடுக்கும் நேரத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கான செலவுகள் திருத்தப்படும் என்று அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தினத்துடன் ஒப்பிடும் போது வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கான கால அவகாசம் மிகக் குறைவாக இருந்தால் செலவுகள் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் அரசாங்க அச்சகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதுடன், தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.