'உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்' என தவறான தகவலை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன்!

TestingRikas
By -
0

'உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்' எனும் தகவல் பிழையொன்றினை நேற்று (ஞாயிறு) இரவு விஜய் டி.வியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பதிவு செய்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து பேசிய கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர் என்று குறிப்பிட்டார்.

'பிக் பாஸ்' சீசன் - 6 தொடரை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 11ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெண்களின் விடுதலை குறித்து பாரதி எழுதிய மற்றும் ஆசைப்பட்ட விடயங்களை மேற்கோள்காட்டும்போது உலகின் முதல் பெண் பிரதமர் ஒரு இந்தியர் என்றவாறு பேசினார்.

"பெண்ணுக்கு விடுதலை கிடைத்தால்தான், மண்ணுக்கு விடுதலை கிடைக்கும்," என்று சொன்ன கமல், "வெறும் வாய்ப்பேச்சில் வீரம் பேசாமல் 'சக்கரவர்த்தினி' என்ற ஒரு பத்திரிகையை தொடங்கி அதில் பெண்களையும் எழுத வைத்தார் பாரதி" என்று கமல் கூறினார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)