உங்கள் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்தனை செய்துவிட்டு சில முக்கிய விடயங்களை இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்..

▪️உங்கள் பிள்ளை பரீட்சை முடிந்து வீடு திரும்பும் போது சிரித்த முகத்துடன் வரவேற்பு கொடுங்கள்.

▪️உங்கள் நிபந்தனையற்ற அன்பை பிள்ளைக்கு வழங்குவதை உறுதிப்படுத்துங்கள்.

▪️உங்கள் அன்பு பிள்ளையின் பரிட்சையுடன் தொடர்புடையது அல்ல என்பதை உறுதிப்படுத்துங்கள் 

▪️பரீட்சை எப்படி நடந்தது, அல்லது எத்தனை மதிப்பெண்கள் வரும், என்றோ அல்லது அது போன்ற எதையும் உங்கள் பிள்ளையிடம் கேட்காதீர்கள்.

▪️ அவர்கள் பரீட்சையை எப்படிச் செய்தார்கள் என்பதை விளக்குவதற்கு வாய்ப்பு கொடுங்கள்.

▪️முடிவு வெளிவரும் வரை அவர்கள் செய்த தவறுகளில் தங்கி இருக்க அவர்களுக்கு அவகாசம் கொடுக்காதீர்கள். 

▪️அவர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்த அவ்வாறே எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கால திட்டங்களைக் கூற வாய்ப்புகளை கொடுங்கள்.

▪️உங்கள் பிள்ளை மன அழுத்தத்தில் அல்லது ஏதேனும் கவலையில் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் பரீட்சை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

▪️இந்தத் பரீட்சை வாழ்க்கையின் மற்றொரு கட்டத்தின் முடிவல்ல என்பதை உங்கள் பிள்ளைக்கு  நினைவுபடுத்துங்கள்.

▪️பிள்ளை பரீட்சைக்கு தோற்றியதை பாராட்டி ஏதேனும் ஒரு சிறிய பரிசை கொடுங்கள். அது ஒரு உணவாக அல்லது உங்களுக்கு முடியுமான எதுவாகவும் இருக்கலாம்.

▪️இந்த நேரத்தில் உங்களதும் உங்கள் பிள்ளையினதும்
நல்வாழ்வில் கவனம் செலுத்துங்கள்.
➖➖➖➖

*உங்கள் அயராத ஒத்துழைப்பிற்கும் உங்கள் பிள்ளையின் முயற்சிக்கும் பொருத்தமான கூலி கிடைக்க பிரார்த்தனை செய்கிறோம்*
🤲🤲🤲

✒️ அஸ்ஹர் அன்ஸார் FRSPH (UK)
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.