உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் அரபு மொழி மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.

உலகில் பேசப்படும் 6900 மொழிகளில், வெறும் 100 மொழிகளே அதிகம் பேசப்படுகின்றன. இதில் மிக அதிகம் பேசப்படும் 30 மொழிகளில் அரபு மொழியானது 06 வது ( உலக வீச்சில் 2வது) இடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்..

ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் அங்கம் பெற்றிருப்பினும் வெறும் 06 மொழிகளே ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக மொழியாக அங்கிகாரம் பெற்றுள்ளது.. அவைகள்  "பிரான், ஆங்கிலம், ரஷ்யன், சைனிஸ், ஜப்பானிஸ், அரபு போன்ற மொழிகளாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் 06 வது அலுவலக மொழியாகக் காணப்படும் அரபு மொழியானது, 1973 ம் ஆண்டு Decmber - 18 ல் UNA யின் அலுவலக மொழியாக அங்கிகாரம் பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபை தனது அலுவலக மொழிகளுக்கான உலக தினத்தை 2010-02-09 ல் வெளியிட்டது. அதன்படி December -18 ம்தேதி உலக அரபு மொழி தினமாக அறிவிக்கப்பட்டு 2010-12-18 ல் முதல் முதலில் UNA யின் UNESCO அமைப்பினூடாக அனுஷ்டிக்கப்பட்டது.

இவ்வருடம் 2022-12-18 ம் திகதியுடன் 13 வது முறையாக  உலக அரபு மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது என்பது நினைவு கூறப்பட வேண்டியதாகும்.

உலக முடிவைத் தான்டி நிலைத்து காணப்படும் மொழி, அரபுமொழி என்பதனால் அதனைக் கற்பதும், அறிந்திருப்பதும் அவசியமானதாகும்..

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.