09.01.2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கான தேசிய வலுசக்தி ஆற்றல்கள், மூலோபாயங்கள் மற்றும் திட்டவரைபு 
வலுசக்தித் துறையை நிலைபெறுதகு வகையில் அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் மற்றும் மூலோபாயங்களை அடையாளங்கண்டு பொருத்தமான பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கும், குறித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சரவையால் எட்டப்படுகின்ற தீர்மானங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் பின்னூட்டல்களை மேற்கொள்வதற்காக 30.08.2022 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கௌரவ பிரதமர் அவர்களின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த உபகுழு ஏற்புடைய பங்கீடுபாட்டு நிறுவனங்கள், துறைசார் தொழில் நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் ஒருசில கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைசார்ந்த பரிந்துரைகள் மற்றும் திருப்புமுனைகள் உள்ளடங்கலான திட்டவரைபொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

75 ஆவது சுதந்திரதின வைபவம்
2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் 75 ஆவது சுதந்திரதின வைபவம் மற்றும் அதற்கு இணையாக அந்தந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டத்தை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார். குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

2023 மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கான முன்மொழிவுகள்

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் மற்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த மின்கட்டணத் திருத்தம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் அமைச்சரவையால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது நிலவுகின்ற நிதிநிலைமையின் கீழ் மின்சார சபைக்குத் தேவையான நிதியை வழங்குவதற்கு திறைசேரிக்கு இயலாமையால், நாட்டில் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக மின்பாவனையாளர்களுக்கு ஏற்படுகின்ற தாக்கங்களை இயன்றவரை குறைத்து மின்விநியோகத்தை மேற்கொள்வதற்கான செலவை மாத்திரம் ஈடுசெய்து கொள்றும் வகையில் தற்போதுள்ள மின்கட்டணத்தை திருத்தம் செய்வதைத் தவிர்ந்த வேறெந்த மாற்று வழிகள் இல்லையென்பது அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ்க்காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அங்கீகாரம் வழங்குவதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது :
இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச மின்கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறித்த தரப்பினர்களிடம் கேட்டறிந்து ஆராய்ந்துள்ள ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், 15.02.2022 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த திருத்தங்களை முன்வைத்தல்.
அதுவரைக்கும், மின்சக்தி தொழிற்றுறை தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள பொதுக் கொள்கை வழிகாட்டல் திருத்தங்களுக்கமைய இடைக்காலப் படிமுறைகளாக,, 2023.01.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மின்சார சபையின் உத்தேச மின்கட்டணத்தைத் திருத்தம் செய்வதற்காக இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் திருத்தங்கள் எதுவும் சமர்ப்பிக்காவிடின், குறித்த திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை மின்சார சபை படிமுறைகளை மேற்கொண்டு தொடர்ந்துவரும் மாதாந்த மின்கட்டணப் பட்டியலில் தேவையான இணக்கங்களை மேற்கொள்ளல்.

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான விருப்பக் கோரல்கள் 

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் முழுமையான திட்டத்திற்கமைய, விமானப் போக்குவரத்துக்களைப் போலவே விமானப் போக்குவரத்து அல்லாத ஏனைய பணிகளுக்காகவும் வர்த்தக வாய்ப்புக்களை செயற்படுத்தி பல்நோக்கு வர்த்தக மத்திய நிலையமாகக் குறித்த விமான நிலையத்தை பரிமாற்றுவதற்காக ஆற்றல்வளம் காணப்படுகின்றது. அதனால், அரச-தனியார் பற்குடமை முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் குறித்த வசதிகள் மற்றும் சொத்துக்களைப் பயனுறு வகையில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, வானூர்தி போக்குவரத்து மற்றும் வானூர்தி போக்குவரத்து அல்லாத வர்த்தகங்களை மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்வதற்காக நேரடி மற்றும் மறைமுக விமான சேவைகள் தொடர்பான தொழில் முயற்சியாளர்களிடமிருந்து விருப்பக் கோரல்களை பெறுவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

கொரியா சுற்றுலா நிறுவனத்தின் நிதியனுசரணை மூலம் இலங்கையில் மத்திய மற்றும் வடகீழ் வலயத்தை மையப்படுத்தி சமுதாயமட்ட சுற்றுலா அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான குச்சவெளி சுற்றுலா அபிவிருத்தி பிரதேசத்தை மையப்படுத்தி கொரியா சுற்றுலா நிறுவனத்தின் நிதியனுசரணையின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் “சமுதாயமட்ட சுற்றுலா அபிவிருத்திக் கருத்திட்டத்தை” நடைமுறைப்படுத்தவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரியா சுற்றுலா நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு குறித்த கருத்திட்ட யோசனை தொடர்பாக சாத்தியவள ஆய்வை மேற்கொண்டு முழுமையான உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2.172 தென்கொரிய வொன் பில்லியன்கள் (2.172 டிn றுழn) நிதியுதவி வழங்குவதற்கும், அதன் முதலாம் கட்டமாக குறித்த சுற்றுலா அபிவிருத்திக் கருத்திட்டத்தின் முழுமையான திட்டத்தைத் தயாரித்தல், பயிற்சி வேலைத்திட்டங்களை தயாரித்தல், மற்றும் முன்னோடி பயிற்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தென்கொரிய வொன் 400 மில்லியன்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கொரியா சுற்றுலா நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இடையில் உடன்பாட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் உராய்வுநீக்கி மசகு எண்ணெய் (டுரடிசiஉயவெ) சந்தையை தளர்த்துதல் மற்றும் புதிய விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்தல்

1961 ஆம் ஆண்டின 28 ஆம் இலக்க பெற்றோலிய கூட்டுத்தாபன சட்டம் மற்றும் விளைவாய்ந்தவையான திருத்த ஏற்பாடுகள் மூலம் உராய்வுநீக்கி மசகு எண்ணெய் (டுரடிசiஉயவெ) தொழிற்துறைக்கு பிரவேசிப்பதற்கு எதிர்பார்த்துள்ள புதிய விண்ணப்பதாரர்களை தெரிவு செய்வதற்காக மற்றும் அதற்கமைய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி விடயதானத்திற்கப் பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அவர்கள் எமது நாட்டின் உராய்வுநீக்கி மசகு எண்ணெய் சந்தையை முழுமையாக தாராளமயப்படுத்தியுள்ளார். தற்போது எமது நாட்டில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 26 நிறுவனங்கள் உரிமப்பத்திரதாரர்களாக உராய்வுநீக்கி மசகுஎண்ணெய் தொழிற்துறையில் ஈடுபடுகின்றன. பாவனையாளர்களுக்கு மிகவும் போட்டியான விலையில் உராய்வுநீக்கி எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்புக் கிட்டும் வகையில் உயர்தரத்துடன் கூடிய, புத்தாக்க மற்றும் போட்டித்தன்மையுடன் கூடிய உற்பத்திகளை எமது நாட்டின் சந்தைக்கு உள்வருவதற்கு வாய்ப்புக்களை வழங்கும் வகையில் இலங்கை உராய்வுநீக்கி மசகு எண்ணெய் (டுரடிசiஉயவெ) சந்தைக்குப் புதிதாக பிரவேசிப்பவர்களைத் தெரிவு செய்வதற்காக தகமைகளைக் கோருகின்ற விண்ணப்பங்களைக் கோருவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

ஏற்றுமதி அடிப்படையிலான பெற்றோலிய சுத்திகரிப்பு மற்றும் உற்பத்திப் பொருட்கள் தயாரிப்பு நிலையத்தை அம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் நிறுவுதல்

அம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட பெற்றோலிய சுத்திகரிப்பு மற்றும் உற்பத்திப் பொருட்கள் தயாரிப்பு நிலையத்தை நிறுவுவதற்கு அதிக ஆற்றல்வளம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த ஏற்றுமதி வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கமைய, அம்பாந்தோட்டை பிரதேசத்தில் பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதற்றுப் பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காக விருப்பக் கோரல் அறிவித்தலை வெளியிடுவதற்கும், மற்றும் அவற்றில் அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்கின்ற முதலீட்டாளர்களின் விபரத்துடன் கூடிய உத்தேசத்திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இரசாயனப் பொருட்கள் முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கைக்கான திருத்தங்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டப் புள்ளிவிபரங்களுக்கமைய, உலகளாவிய ரீதியில் தற்போது 350,000 இரசாயனப் பொருட்கள் சந்தையில் காணப்படுகின்றன. உலக சுகாதார தாபனத்தின் புள்ளிவிபரங்களுக்கமைய, இரசாயனப் பொருட்களின் வெளிப்படுத்தல்களால் வருடாந்தம் 2 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். அத்துடன், இரசாயனப் பொருட்களைத் தகுந்த வகையில் முகாமைத்துவம் செய்யாமையால் ஆட்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரசாயனப் பொருட்களின் பயன்பாடு சுற்றாடலுக்கும் மனித சுகாதாரத்திற்கும் ஏற்படுத்துகின்ற எதிர்மய விளைவுகளைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் 21 ஆவது நிகழ்ச்சி நிரலில் “நச்சு இரசாயனப் பதார்த்தங்களின் சுற்றாடல் நேயம்மிக்கதான மனித முகாமைத்துவம்” உலகளாவிய ரீதியில் முன்னுரிமையளித்து கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாக அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை கையொப்பமிட்டுள்ள சர்வதேச உடன்படிக்கைக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இரசாயனப் பொருட்களின் முகாமைத்துவம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு, குறித்த பிரதான அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர்களுடன் கலந்துரையாடி தயாரிக்கப்பட்டுள்ள இரசாயனப் பொருட்கள் முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

2022/2023 ஆம் ஆண்டுக்கான கண்டி தேசிய மருத்துவமனைக்கான மூலப்பொருட்கள் விநியோகத்திற்கான பெறுகை

2022/2023 ஆம் ஆண்டுக்கான கண்டி தேசிய மருத்துவமனைக்கான மூலப்பொருட்கள் விநியோகத்திற்கான பெறுகைக்காக தேசிய போட்டி விலைமனுக் கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, ஜனதா ஃபூட் சப்லயர்ஸ் நிறுவத்திற்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

ஹயிட்ரோஃபோபிக், நீர்விலக்கு முனைவுத்தன்மையுள்ள: கண்வில்லைகளை கொள்வனவு செய்வதற்கான பெறுகை (வகை 1-7)

இப்பெறுகை தொடர்பாக சர்வதேச போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, ஆஃள விஷன் சொலூஷன் லங்கா (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்திற்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

பலப்பிட்டிய ஸ்ரீ ராகுல ஆராமை புராதன விகாரையின் துறவறப் புகுநிலை மனப்பாங்கு விருத்தி பிக்குகள் கல்லூரி (தாபித்தல்) சட்டமூலம்

பலப்பிட்டிய ஸ்ரீ ராகுல ஆராமை புராதன விகாரையின் துறவறப் புகுநிலை மனப்பாங்கு விருத்தி பிக்குகள் வித்தியாலயம் (தாபித்தல்) சட்டமூலம் தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க அவர்கள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளார். குறித்த அடிப்படை சட்டமூலம், சட்ட வரைஞரால் ஒழுங்குமுறையாக தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்பதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள் 52(6) இன் ஏற்பாடுகளுக்கமைய குறித்த சட்டமூலத்தை விதந்துரைத்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அடுத்துவரும் 25 ஆண்டுகள் - அடுத்துவரும் 25 ஆண்டுகளில் இலங்கையில் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் துறைகளில் அபிவிருத்தியை எட்டும் நோக்கில் கீழ்க்குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எதிர்பார்க்கப்படுவதாக கௌரவ ஜனாதிபதி அவர்கள் அமைச்சரவைக்குத் தெளிவூட்டியுள்ளார். 
 கீழ்க்காணும் புதிய நிறுவனங்களைத் தாபித்தல்
வரலாறு தொடர்பான நிறுவனம்
பொருளியல் மற்றும் வர்த்தக நிறுவனம் 
பெண்கள் மற்றும் பால்நிலை தொடர்பான நிறுவனம் 
அரச மற்றும் அரச கொள்கைகள் தொடர்பான பல்கலைக்கழகம்
விவசாய தொழிநுட்ப பல்கலைக்கழகம்
காலநிலை மாற்றங்கள் தொடர்பான பல்கலைக்கழகம் 
விளையாட்டு பல்கலைக்கழகம்

  (ii)    கீழ்க்காணும் பணிகளுக்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தல் :
பெண்கள் சட்டங்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழு 
பால்நிலை சமத்துவச் சட்டம் 
பெண்களை வலுவூட்டல் சட்டம் 
சிறுவர் பாதுகாப்பு சட்டம்
காலநிலை மாற்றங்கள் தொடர்பான சட்டம்
சமூக நீதி தொடர்பான ஆணைக்குழு சட்டம் 
மீள் வனமாக்கல் மற்றும் தாவரக்காப்பு சட்டம் 
உயிர் இருப்புக்கள் சட்டம் 
மகாவலி ஆறு
சிங்கராஜ வனம்
சிவனொளிபாதமலை வனாந்தரம்ஃமக்கள் சூனியப் பிரதேசம் (ளுசipயனய)
ஹோர்டன் சமவெளி
நக்கல்ஸ் மலைத்தொடர்
இராமர் பாலம் 
சமுத்திர வளங்கள் ஆய்வு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான சட்டங்கள் (விசேட வலயங்கள்ஃநுநுணு இற்குள்)
முத்துராஜவெல (பாதுகாக்கப்பட்ட) சட்டம்
விசேட தேவையுடையவர்களுக்கான பாதுகாப்பு சட்டம்
 
கீழ்வரும் புதிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் : 
நகர்ப்புற வனம் 75
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக கொழும்பில் 1996 வீட்டு அலகுகள்
தேசிய இளைஞர் தளம் தொடர்பான கருத்திட்டம் மற்றும் வேலைத்திட்டங்கள்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.