ஓட்டமாவடி அல் இஹ்ஷானின் பழைய மாணவர் கிரிக்கெட் சம்பியன் கிண்ணம் ஓஸியன்  2010 அணி வசமானது 

ஓட்டமாவடி பதுரியா-மாஞ்சோலை அல் இஹ்ஸான் விளையாட்டுக் கழகம் நடாத்திய பிரதேச பாடசாலை பழைய மாணவர் அணியினர்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியில் ஓஸியன் 2010 அணியினர் 26 ஓட்டங்களினால் மீராவோடை ஹிதாயன்ஸ் 2025 அணியை  வெற்றி கொண்டது  .

29 பழைய மாணவர்கள் அணிகள் பங்கு கொண்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி  அண்மையில் மாஞ்சோலை அல்-ஹிறா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 

இறுதிப்போட்டிக்கு மீராவோடை ஹிதாயன்ஸ் 2015 அணியும் ஓட்டமாவடி ஓஸியன்ஸ்  2010 அணியும் தெரிவாகியிருந்தன. .

இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓஸியன்ஸ் 2010 அணி 6 விக்கட் இழப்பிற்கு 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில், ஹபீஸ் அதிகப்படியாக 18 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பதிலுக்கு  துடுப்பாடிய ஹிதாயன்ஸ் 2015 அணியினர்
  6 விக்கட் இழப்பிற்கு 18 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. அணி சார்பாக றிஸ்மின் 11 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஓஸியன்ஸ் 2010 அணியின் ஹபீஸ் தெரிவானார்.

கழகத்தின் தலைவர் அபூபக்கர் றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இறுதி நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌபர் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக சட்டத்தரணி ஹபீப் றிபான், ஐஸு ரெண்ட்ஸ் உரிமையாளர் ஏ.எஸ்.அறபாத் ஆகியோரும் விசேட அதிதிகளாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் குற்றத்தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஈ.எல்.பதுர்தீன், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் எம்.பி.நபீர், அல் இஹ்ஷான் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான், கல்குடா மீடியா போரத்தின் தலைவர் எம்.ரீ.எம்.பாரிஸ், மாஞ்சோலை அல் ஹிறா வித்தியாலய அதிபர் ஏ.சீ.ஜிப்ரி கரீம், மீராவோடை உதுமான் வித்தியாலய அதிபர் எம்.பி.முபாரக், எஸ்.ஐ.எம்.முஸம்மில், ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.எம்.ஜெஸ்லின், ஓட்டமாவடி தேசிய பாடசாலை ஆசிரியர் எம்.எல்.எம்.நஜீம், பதுரியா நகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் ஈ.எல்.எம்.றியாஸ், மாஞ்சோலை கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் எம்.ஐ.அப்துல் ஹமீத், மாஞ்சோலை ஹிளுறிய்யா ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவர் என்.சுலைமாலெப்பை, முன்னாள் தலைவர் எஸ்.எம்.அபூபக்கர், எம்.எம்.பைறூஸ், ஏ.எம்.இர்பான், எஸ்.எம்.சபீர் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

கலந்து கொண்ட அதிதிகளால் வெற்றி பெற்ற அணிக்கான கிண்ணம் மற்றும் சிறப்பு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அஸ்ஹர் இப்றாஹிம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.