பயிற்சி வகுப்புகள் நடைபெறும் கட்டிடத்தின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பியைத் தொட்டதால், அங்கிருந்த ஒருவர் துரதிர்ஷ்டவசமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

குளியாப்பிட்டி நகர மண்டபத்திற்கு பின்புறம் உள்ள பயிற்சி வகுப்புகள் நடைபெறும் கட்டிடத்திற்கு இரும்புக் குழாய் ஒன்றை எடுத்துச் சென்ற நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அந்த கட்டிடத்தில் பயிற்சி வகுப்பில் பணியாற்றிய விமுக்தி தில்ஷான் பெரேரா என்ற 28 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.