பாடசாலைகளில் கல்வி சுற்றுலா மேற்கொள்ளும் விடயமாக கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்தது கல்வி அமைச்சு!

உடன் அமுலுக்கு வரும் முகமாக பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் கல்விச்சுற்றுலா ஒரு நாளைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மாணவர்களை 100 கிலோ கிலோமீட்டர்க்கு   உட்பட்டவாறு  சுற்று பிரயாணத்திற்க்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கல்வி சுற்றுலாவிற்காக அழைத்து செல்லப்படும் மாணவர்கள் மாலை 06 மணிக்கு முன்னராக மீண்டும் பாடசாலைக்கு அழைத்து செல்லப்படல் வேண்டு மெனவும் கல்வி அமைச்சு கண்டிப்பான உத்தரவினை பிறப்பித்துள்ளது!

இதே வேளை கல்விச்  சுற்றுலாவின் போது மாணவர்களை அழைத்து செல்லும் இடங்கள் மற்றும் செல்லும் பாதைகளை முன் கூட்டியே அதிபர் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களிடம் அனுமதி பெற்றிருத்தல் அவசியமெனவும்  கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க இவ் உத்தரவினை மீறும் பாடசாலையைசேர்ந்த அதிபருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.