ஹாத்தமுன் நபிகளார்
காட்டித் தந்திருந்தால்
காதி நீதிபதிகளாக
பெண்களை நியமிப்பதில்
தவறேதுமில்லை!
அருமை நபிகளார்
அங்கீகரித்திருந்தால்
பெண்களை அங்கீகரிப்பதில்
ஆட்சேபனையில்லை!
எங்கள் பெருமானார்
ஏவியிருந்தால்
நியமிப்பதில் நியாயமுண்டு!
நபியவர்கள் நியமித்திருந்தால்
நாமும் நியமிப்பது
வாஜிபாகி விடுகிறது!
காட்டித் தராததையும்
அங்கீகரிக்காததையும்
மேலங்கியாக
அணிந்து கொள்ளலாமா?
அவர்களின் கோரிக்கை
இவர்களின் எதிர்பார்ப்பு ......
இதுவா பேச்சு?
மார்க்க வழிமுறையே
எங்கள் உயிர் மூச்சு!
உடல் ரீதியாகவும்
உள ரீதியாகவும்
பலவீனமானவர்களே
பெண்கள்!
பெண்மை அது
மென்மை.
நின்று பிடிக்குமா
வன்மையான தீர்ப்புகளில்?
ஆண்களோடு ஒப்பிடுகையில்
பெண்களின் சாட்சியம் கூட
வலிமை குன்றியதே!
பெண்களின் உரிமைகளை
பெண்களே பேண வேண்டுமென்றால்
நாலுபேரையாவது
நபியாக அனுப்பியிருப்பானே!
"ஆண்களே நிர்வாகிகள்"
அழகிய மார்க்கம்
அழகுற எடுத்தியம்புகிறது!
காதி நீதிமன்றங்களில்
ஆவியாகச் சுற்றும்
தலைகளை மாற்றுவது
வேறு விஷயம்.......
பெண்ணுரிமையெனும்
லேபளை மாட்டப் பார்ப்பது
வேறு விஷயம் ..........
விளக்காக
வெளிச்சம் காட்டுகிறது
வள்ளல் நபி வழிமுறைகள்!
புதிய விளக்குகளை யாரும்
ஏந்திப் பிடிக்கத் தேவையில்லை!
நளினப்படுத்தப் போய்
பெண்மையை
மலினப்படுத்தலாமா?
இஸ்லாத்தில் என்ன
பெண்ணுரிமைக்கா பஞ்சம்?
- கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் -