நுவரெலியாவில் மோட்டார் சைக்கிளுடன் வேன் மோதி விபத்து - இருவர் வைத்தியசாலையில்
நுவரெலியா பொலிஸ் பிரிற்குட்பட்ட கெமுனுபுர மார்காஸ்தோட்டப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர்
காயமடைந்துள்ளனர்
பதுளை பகுதியில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த வேன் நுவரெலியா கெமுனுபுர மார்காஸ்தோட்டப் பகுதியில் ஸ்ட்ராபெரி
பண்ணைக்கு அருகில் சிறு வீதியில் இருந்து பிரதான வீதியினை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள்களுடன் குறித்த வேன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் 1990 நோயாளர் காவு வண்டி மூலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதில் படுகாயம் அடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பேராதெனிய வைத்தியசாலைக்கு விசேட சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டதாக வைத்தியசாலையில் தகவல்கள் தெரிவித்தன.
இவ்விபத்தானது, வேன் சாரதியின் பாதுகாப்பற்ற மற்றும் கவனயீனமான வாகன செலுத்துகை காரணமாக இடம்பெற்றுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வேன்
சாரதி கைது செய்யப்பட்டதுடன், அவரை நாளை திங்கட்கிழமை நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார் .
கருத்துகள்
கருத்துரையிடுக