இந்தியாவில் பாரிய நில நடுக்க அறிவிப்பு - இலங்கையிலும் தாக்கம்

இந்தியாவில் ஹிமாலய மலை தொடர் மற்றும் அண்டிய பிரதேசங்களில் எதிர்காலத்தில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் அறிகுறி தென்படுவதாக அந்நாட்டு காலநிலை மற்றும் இடர் முகாமைத்துவ
அரச நிறுவனங்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வருகின்றன.

இதனால் பாரிய உயிர் பொருட்சேதங்கள் ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளை செய்து அரசாங்கம் பொது மக்களை
பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் 8 றிச்டர் அளவிலும்  அதிகமாக இருக்கும் எனவும் இதற்கு முன் இப்பிரதேசத்தில் ஏற்பட்ட நில
நடுக்கத்தின் போது ( 5 றிச்டர்) இதன்
தாக்கம் இலங்கையின் கொழும்பு நகரம் உட்பட மேலும் பல பிரதேசங்களில் உணரப்பட்டதாகவும்
இதனால் எதிர்காலத்திலும் நில நடுக்கங்களின் தாக்கங்கள் இலங்கையிலும் உணரப்படலாம் எனவும் தெரிவிக்கப் ப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.